Trust Regd. No

37/2017

80G Exempted Trust

ABOUT AVC Welfare Trust

சென்னையில் வாழும் மக்கள் ஒன்றிணைந்து அனைவருக்கும் உதவும் வகையில் ஒரு அறக்கட்டளை தொடங்கலாம் என ஜூலை 2016 ஆம் ஆண்டு 31 ஆம் தேதி அன்று தீர்மானிக்கப்பட்டு, அதனைத் தொடர்ந்து 05.04.2017 அன்று AVC Welfare Trust என்ற அறக்கட்டளை சென்னையில் தொடங்கப்பட்டது.

இந்த அறக்கட்டளையின் நிர்வாகிகளாக ஆர். கே. துரைசாமி,  கே. எத்திராஜ்,   ஆர்.ஏ.கே நடராஜன்,   வி. தனசேகர் ,   ஆர். அழகரசன்,  ஏ. ஹரி பாபு, கே. பாலாஜி மற்றும் பல தன்னார்வர்களுடன் இந்த அறக்கட்டளை பல நலப்பணிகளை மேற்கொண்டு வருகின்றது.

We are Serving|Helping Hands on

Social Community Welfare Activities

We have initiated to join together for the goodness to be happened for the needy welfare

Volunteer

Donors

Years

Welfare Projects

Click Here to View Our AVC Youtube Channel Activities

Donate|Participate

On Your Special Occasion

அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளே

2022ஆம் ஆண்டு 10ஆம் வகுப்பு 12ஆம் வகுப்பு அரசு தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகள்

தங்கள் T.C மற்றும் மதிப்பெண் பட்டியலை இணைத்து 15.08.2022க்குள் அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அட்சய பாத்திரம்

இத்திட்டத்தின் மூலம் அவரவர் விருப்பத்திற்கேற்ப தனது பிறந்தநாள், திருமண நாள், குழந்தையின் பிறந்தநாள், பெற்றோரின் பிறந்தநாள் மற்றும் இதர விசேஷ நாட்களில் கொண்டாடும் விதமாக அவர்கள் வழங்கும் நன்கொடை கொண்டு தேவைப்படுவோருக்கு உதவி வருகிறது.

ஒரு படி அரிசி

இத்திட்டத்தின் மூலம் அவரவர் விருப்பத்திற்கேற்ப தனது பிறந்தநாள், திருமண குழந்தையின் பிறந்தநாள், பெற்றோரின் பிறந்தநாள் மற்றும் இதர விசேஷ நாட்களில் கொண்டாடும் விதமாக நபர் ஒருவர் ரூபாய் 600 வழங்க வேண்டியிருக்கும். அதன் மூலம் ஆதரவற்றவர்களுக்கு அரிசி வழங்கப்பட்டு வருகிறது

பெண் குழந்தை தத்தெடுப்பு / கல்வி திட்டம்

AVCWT யின் 6 வது ஆண்டு விழாவின் (31-ஜூலை-2021) ஒரு பகுதியாக, டிரஸ்டி மற்றும் நிர்வாக உறுப்பினர்கள், பள்ளி முதல் பட்டப்படிப்பு வரை தங்கள் படிப்பை கவனித்துக்கொள்ள, "பெண் குழந்தை தத்தெடுப்பு / கல்வி திட்டம்" என்ற புதிய திட்டத்தைத் தொடங்க முடிவு செய்துள்ளனர். AVCWT வலைத்தள கட்டண நுழைவாயில் மூலம் உங்கள் மதிப்புமிக்க பங்களிப்பை நன்கொடையாக வழங்கவும்.

உயர் கல்வி படிப்புக்காக நன்கொடை

கிராமத்தில் மற்றும் நகரத்திலுள்ள நலிவடைந்து ஆண் / பெண் குழந்தைகளின் உயர் கல்வி படிப்புக்காக நாங்கள் தகுதியறிந்து தேவைப்படுவோருக்கு கல்வி கற்க டியூஷன் ஃபீஸ் கொடுக்க இருக்கின்றோம். இதற்காக உங்களால் முடிந்த தொகையை ஆன்லைன் மூலமாக நீங்கள் உங்கள் பங்களிப்பாக கொடுக்கலாம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு

வருகின்ற நவம்பர் முதல் வாரம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 100 முதியோர் மற்றும் 100 குழந்தைகளுக்கு புதிய உடை மற்றும் இனிப்பு கொடுக்க இருக்கின்றோம். 1 செட் ₹600/- ஆகலாம். ஆகவே தங்களால் முடிந்த அன்பளிப்பு தொகையை ஆன்லைன் மூலமாக செலுத்தி இந்த குழந்தைகள் & முதியோர் முகத்தில் உள்ள சந்தோஷத்தை பார்க்கலாம்.

Recent|Social Activities